வாழ்க்கை பருவங்களும் தருணங்களும் நம்மை உறுத்துகின்றன.ஏதோ ஒரு தேடல் உள்ளூக்குள் தனக்குதானே உறுமுகிறது.
தேடலை தேடி அலைகிறோம். உள்ள தேடலை அடுத்தவர் முகங்களில் தேடுகிறோம். உண்மையை கண்டு பயப்படுகிறோம்.
ஒரு மாயை சங்கிலியால் நம்மை நாமே கட்டி பிணைத்து கொண்டு விடுபட எத்தனிக்கிறோம். முடிவுகளில் தடுமாற்றம்.எல்லையில்லா பிரபஞ்சத்தின் முடிவில்லாத ஓட்டம்.
தருணங்கள் எல்லா பருவங்களிலும் திரும்ப திரும்ப வெவ்வேறு முகங்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது. மனது அதனை புதிதாக ஏற்றுகொள்கிறது.பழைய தருணங்களின் படிப்பினைகளுக்கு மதிப்பில்லை. முடிவு ஒன்றாகிறது .வாழ்க்கை சுழற்சி அடுத்த கட்டத்தை \ வட்டத்தை அடைகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment